டிவி விவாதத்தில் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சோயிப் அக்தர்!

புதன், 27 அக்டோபர் 2021 (16:00 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் டிவி நேரலை விவாதத்தின் போது பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டிக்கு பின் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கலந்துகொண்டார். அவரோடு விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட சில ஜாம்பவான் வீரர்களும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் நோமனுக்கும்  அக்தருக்கும் இடையே வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியது. இதனால் நோமன் அக்தரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற சொல்லி பேசினார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதன் பின்னர் அக்தர் நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் எனக் கூறி மைக்கைக் கழட்டிவிட்டு வெளியேறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்