இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் ஈடுபட்டதாக 31 எம்பிக்கள் இன்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் டி.ஆர்.பாலு, ஆர்.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்பிக்கள், தமிழச்சி தங்கபாண்டியன், சி,என், அண்ணாதுரை, செல்வம். எஸ். எஸ். பழனிமாணிக்கம் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன், திருநாவுக்கரசு ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.