மக்களவை வரலாற்றில் 46 எம்பி.,களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை- சு.வெங்கடேஷ் எம்பி

திங்கள், 18 டிசம்பர் 2023 (17:43 IST)
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து சு.வெங்கடேஷ் எம்பி கருத்து  தெரிவித்துள்ளார்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில்  சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இருவர் கண்ணீர்  புகைக்குண்டு வீசினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் ஈடுபட்டதாக 33 எம்பிக்கள் இன்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு, காங்கிரஸ், திமுக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சு.வெங்கடேஷ் எம்பி தெரிவித்துள்ளதாவது:

‘’நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியதற்காக இன்று மீண்டும் 33 எம் பி கள் இடைநீக்கம்.

மக்களவை வரலாற்றில் 46 எம் பி களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது மோடி அரசு.

நாளை இன்னொரு நான்கு எம் பி களை இடைநீக்கம் செய்து அரைசதத்தை எதிர்பார்க்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்