33 எம்பிக்கள் இடைநீக்கம்: ''இது அதிகார மமதையின் உச்சம்''- திருமாவளவன்

திங்கள், 18 டிசம்பர் 2023 (18:10 IST)
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் ‘’மாநிலங்களவையிலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இது அதிகார மமதையின் உச்சம். இந்த சனநாயக விரோதப் போக்கினை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது’’என்று  திருமாவளசன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில்  சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இருவர் கண்ணீர்  புகைக்குண்டு வீசினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து  எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் ஈடுபட்டதாக 33 எம்பிக்கள் இன்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு, காங்கிரஸ், திமுக  உள்ளிட்ட   நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளதாவது:

‘’மக்களவையில் இன்று பிற்பகல் 3.00 மணி அமர்வின் போது எதிர்க்கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் 33 பேரை இடைநீக்கம் செய்துள்ளது மோடி அரசு.

" நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்; உள்துறை அமைச்சர் அண்மையில் நடந்த பார்வையாளர்களின் அத்துமீறல் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்; அவர்களுக்கு அனுமதி பெற்றுத்தந்த பாஜக உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் "என்கிற கோரிக்கைகளை வலியுறுத்திய எதிர்க்கட்சிகளை முற்றாக முடக்கும் வகையில் இந்த அடாவடிப் போக்கில் ஆட்சியாளர்கள் இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாநிலங்களவையிலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இது அதிகார மமதையின் உச்சம். இந்த சனநாயக விரோதப் போக்கினை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்