கேரளாவில் மீண்டும் நிஃபா வைரஸ்! 14 வயது சிறுவனுக்கு பாதிப்பு உறுதி!

Prasanth Karthick

ஞாயிறு, 21 ஜூலை 2024 (08:37 IST)

கேரளாவில் முந்தைய காலங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிஃபா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக பரவத் தொடங்கிய நிஃபா வைரஸ் பல உயிர்களை காவு வாங்கியது. வௌவால்களால் பரவும் இந்த வைரஸ் கடந்த 2018, 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் கோழிக்கோடு மாவட்டத்தில் அதிகம் பரவியது, 2019ம் ஆண்டில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அதிகம் கண்டறியப்பட்டது.

தற்போது ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கேரளாவில் நிஃபா வைரஸின் தாக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவனூக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் சிறுவன் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், நிஃபா உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து சிறுவனின் பாண்டிக்காடு கிராமம், சிறுவன் படித்த பள்ளி உள்ள அனக்காயம் கிராமங்களிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்