நிலக்கரி சப்ளை ரயில்களுக்கு முக்கியத்துவம்! – 1100 பயணிகள் ரயில்கள் ரத்து!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (13:11 IST)
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க ரயில்கள் வழி நிலக்கரி அனுப்புவது துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மின் உற்பத்தி மையங்களுக்கு ரயில்கள் மூலமாக தொடர்ந்து நிலக்கரி வேகமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நிலக்கரி கொண்டு செல்லும் சரக்கு ரயில்கள் தங்கு தடையின்றி செல்ல வழித்தடங்களில் பல்வேறு பயணிகள் ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர்.

மேலும் நிலக்கரி ரயில்கள் செல்ல ஏதுவாக பல வழித்தடங்களில் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியா முழுவதும் நிலக்கரி ரயில்கள் செல்வதற்காக 1,100 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்