வட இந்தியாவில் ப்ரமோஷனை தொடங்கிய கமல்… பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்பு!

வெள்ளி, 6 மே 2022 (08:53 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ள நிலையில் மலையாள உரிமையை மட்டும் ஆசியாநெட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது விக்ரம் படத்தின் வட இந்திய விநியோக உரிமையை ’பென் மருதூர் சினி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியில் படத்தைப் ப்ரமோஷன் செய்யும் வேலைகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். பாலிவுட் ரசிகர்கள் இடையே பிரபலமாக இருக்கும் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்