புழக்கத்தில் இருக்கும் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்ட்: மத்திய அரசு அதிர்ச்சி!!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (11:41 IST)
நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்டுகள் (பான் எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்) புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.


 
 
இவற்றில் சுமார் 10 லட்சத்து 52 ஆயிரம் பான் கார்டுகள், தனிப்பட்ட நபர்களுக்குரியவை எனவும் தெரியவந்துள்ளது.
 
ஜூலை 1 ஆம் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெறவும் ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ள நிலையில் போலி பான் எண் விவகாரம் மத்திய அரசை அசிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
 
எனவே, இந்த கட்டாயமாக்கப்படும் ஆதார் மற்றும் பான் விவகாரத்தில் மாற்றங்கள் ஏதேனும் வருமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்