பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்காக சுற்றுலா பயணிகள் புக் செய்திருந்த பத்தாயிரம் ரூம்கள் கேன்சல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
மாலத்தீவின் புதிய அதிபர் பதவியேற்றதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறியது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மாலத்தீவின் முக்கிய வருமானமான சுற்றுலா வருமானத்தில் கை வைக்க மோடி முடிவு செய்தார்.
இதனை அடுத்து அவர் லட்சத்தீவு சுற்றுப்பயணம் செய்து இனி மாலத்தீவுக்கு செல்பவர்கள் லட்சத்தீவுக்கு செல்லலாம் என்பதை மறைமுகமாக கூறினார். இந்த நிலையில் மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மாலத்தீவில் இதுவரை 10 ஆயிரத்து 500 ஹோட்டல் புக்கிங் கேன்சல் ஆகி உள்ளதாகவும் அதேபோல 5200 விமான டிக்கெட் கேன்சல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
பலர் இந்தியாவை அவமதித்த மாலத்தீவுக்கு இனி செல்ல மாட்டோம் என்று கூறி கேன்சல் செய்த டிக்கெட்டுக்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது