மூன்று கதைகள்.. மூன்று காதல்கள்..! – நித்தம் ஒரு வானம் விமர்சனம்!

வெள்ளி, 4 நவம்பர் 2022 (12:09 IST)
அசோக் செல்வன் நடித்து இன்று வெளியாகியுள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் விமர்சனம்.

அசோக் செல்வன் நடித்து ரா.கார்த்திக் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா, ஷிவாத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அசோக் செல்வனுக்கு பெற்றோர் ஒரு பெண் பார்க்கின்றனர். அந்த பெண் வேறு ஒருவரை காதலிக்கிறார். மன அழுத்தத்தால் மருத்துவர் அபிராமியிடம் செல்கிறார் அசோக் செல்வன். அசோக் செல்வனுக்கு இரண்டு கதைகளை படிக்கக் கொடுக்கிறார் அபிராமி. அந்த கதைகளில் தன்னையே ஹீரோவாக நினைத்துக் கொள்கிறார் அசோக் செல்வன்.

இரண்டு கதைகளிலும் சுவாரஸ்யமாக முடிவை நோக்கி செல்லும்போது கடைசி பக்கங்கள் இல்லாமல் இருக்கிறது. பின்னர்தான் அது கதையல்ல உண்மை சம்பவம் என அசோக் செல்வனுக்கு தெரிகிறது. கதையின் முடிவை அறிய நிஜ கதாப்பாத்திரங்களை தேடி செல்கிறார் அசோக் செல்வன்


இந்த பயணத்தில் அசோக் செல்வனுடன் ரிது வர்மாவும் இணைகிறார். கதையில் படித்த ஆட்களை நிஜத்தில் அவர் சந்தித்தாரா? அவர்களுடைய கதைகள் இவரை எப்படி மாற்றியது? என்பது சுவாரஸ்யமான முழுநீள திரைப்படம்

ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா என நடிகைகள் அனைவரும் தங்கள் கதாப்பாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் நுட்பமாக பிரித்துக் காட்டி நடித்திருக்கிறார் அசோக் செல்வன். ஒவ்வொரு நடிகையோடும் அசோக் செல்வனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. குறிப்பாக அபர்ணா பாலமுரளியுடனான காதல் ஈர்க்கிறது. இயக்குனர் ரா.கார்த்திக் சிறப்பான காதல் படத்தை அளித்துள்ளார்.

கோபி சுந்தரின் இசை காதலில் மெய் மறக்க செய்கிறது. விது அய்யனாரின் கேமரா இயற்கையை அழகாக காட்டியுள்ளது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று தோன்றினாலும், அயற்சியை அளிக்காமல் ஒரு அழகான காதல் கதையை அளித்ததற்காக பாராட்டலாம்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்