இனவெறியால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாட் மகளின் படிப்புச் செலவை ஏற்ற நடிகையின் கணவர்

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (08:58 IST)
ஜார்ஜ் ஃபிளாட் மகளின் படிப்புச் செலவை ஏற்ற நடிகையின் கணவர்
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாட் என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் ஜார்ஜின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த கொடூர சம்பவம் காரணமாக அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கருப்பினத்தவர்கள் போராட்டம் செய்ததால் கொரோனா பரபரப்பையும் மீறி பெரும் பதட்டம் ஏற்பட்டது. கருப்பின மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளே ஆதரவு கொடுத்ததால் பரபரப்பு அதிகரித்தது
 
இந்த நிலையில் மறைந்த ஜார்ஜ் ஃபிளாட் மகளின் 6 வயது மகளின் முழு படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக பிரபல கவர்ச்சி நடிகை மட்டும் மாடல் அழகி கிம் கர்தாஷியானின் கணவர் கான்யே வெஸ்ட் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது
 
இந்த நிலையில் ஜார்ஜ் ஃபிளாட்டின் 6 வயது மகள் கியான்னா, கான்யே வெஸ்ட்டுக்கும் அவரது மனைவி கிம் கர்தாஷியானுக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம்நன்றி கூறியுள்ளார். என்னுடைய படிப்பு செலவு முழுவதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என்றும், தனது தாயாரும் உங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் என்றும் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்