நாளை அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், வரும் மே ஒன்றாம் தேதி மேலும் ஒரு அஜித் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் நடிப்பில், கடந்த 2000 ஆண்டு வெளியான திரைப்படம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் . இந்த படத்தில் அஜித் உடன் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், தபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி, அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
அஜித் நடித்த குட் பேட் அக்லி நாளை வெளியாக இருக்கும் நிலையில், அடுத்த 20 நாட்களில் இன்னொரு அஜித் படம் பெரிய ரிலீஸாக இருப்பது, ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.