இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் (பில்டப் கொடுத்து உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பு?) படமாக இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான கூலி படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அனிருத் “ஒன்றரை வருடமாக நாங்கள் கூலி படத்துக்காக நாங்கள் வேலை செய்தோம். இறுதி மிக்ஸிங் முடித்து கைகோர்த்தபடி நாங்கள் வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் எமோஷனலாக இருந்தோம். கூலி மிகப்பெரிய வெற்றி பெற்றால் கூலி 2 கண்டிப்பாக வரும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.