இந்த நிலையில் கோவை வெடிகுண்டு சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் எழுப்பியுள்ளார். கோவை கார் வெடிகுண்டு வழக்கில் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.