மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. ஒரே நாளில் 600 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்வு..!

Siva
வெள்ளி, 12 ஜனவரி 2024 (10:48 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் பாசிட்டிவ்வான வாரமாக இருந்து வருகிறது என்பதும் பெரும்பாலான நாட்கள் இந்த வாரத்தில் பங்குச்சந்தை உயர்த்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று திடீரென சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 620 புள்ளிகள் உயர்ந்து 72343 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 178 புள்ளிகள் உயர்ந்து 21,824 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையை பொருத்தவரை  ஐடி பீஎஸ், மணப்புரம் கோல்டு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கோல்டு பீஸ் ஆகியவை உயர்ந்துள்ளதாகவும் கல்யாண் ஜுவல்லரி, ஏபி கேப்பிட்டல்ம்  ஃபார்மா பீஎஸ், சிப்லா ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்