தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

வெள்ளி, 5 ஜூலை 2024 (10:00 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் உள்ளது என்பதும் குறிப்பாக மும்பை பங்குச்சந்தை 505 புள்ளிகள் குறைந்து 79 ஆயிரத்து 545 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இதனை அடுத்து மீண்டும் 80 ஆயிரத்திற்குள் சென்செக்ஸ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 121 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 190 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சன் ஃபார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் , ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்