பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

Siva

திங்கள், 1 ஜூலை 2024 (12:04 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி அமைத்த பிறகு பெரும்பாலும் பங்குச்சந்தை உயர்ந்தே காணப்படுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது என்பதும் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 325 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 358 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 24, 110 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இதே ரீதியில் சென்றால் இந்த வாரத்திற்குள் சென்செக்ஸ் 80,000ஐ எட்டிவிடும் என்று கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
இன்றைய பங்குச் சந்தையில் இந்த இண்டஸ் இண்ட் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி , ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஒரு சில பங்குகள் குறைந்துள்ளதாகவும் மற்ற அனைத்து பங்குகளும் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்