வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

Siva
திங்கள், 27 மே 2024 (11:25 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் தேர்தல் முடிவு வெளியான பின்னர் தான் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை 200 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 610 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 22 ஆயிரத்து 993 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
தேர்தல் முடிவு வெளிவர கிட்டத்தட்ட இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ஒரு வாரத்திற்கு பின்னர் பங்குச் சந்தையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்றும் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டால் பங்குச்சந்தை உச்சத்திற்கு செல்லும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்