சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (09:44 IST)
நேற்று சுதந்திர தினம் என்பதால் பங்கு மார்க்கெட் விடுமுறை என்ற நிலையில் இன்று பங்கு மார்க்கெட் ஆரம்பித்த உடனேயே 400 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை சரியாக 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் தற்போது 425 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 900 என்ற நிலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 15815 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை நன்றாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்