நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் சீன அரசு நிறுவனங்கள்!

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:37 IST)
நியுயார்க் பங்குச் சந்தைகளில் இருந்து சீன நிறுவனங்கள் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சீன அரசுக்கு சொந்தமான ஒரு சில நிறுவனங்கள் அமெரிக்காவில் நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து வரும் நிலையில் அந்த நிறுவனங்கள் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
சீன பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக் ஆகிய நிறுவனங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே அமெரிக்க அரசின் தணிக்கை விதிகளுக்கு சீனா இணங்காவிட்டால் தாராளமாக பங்குச்சந்தைகள் விட்டு வெளியேறலாம் என்று அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் தற்போது சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்