தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. அமெரிக்க தேர்தலுக்கு பின் உயருமா?

Siva

செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:12 IST)
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக ஏற்ற இறக்கம் இன்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு 15 ரூபாய் மற்றும் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரங்களை பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய்   7,355 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய்  58,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,860  எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 105.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  105,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்