ஒரே நாளில் 1500 ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Mahendran

சனி, 8 ஜூன் 2024 (10:53 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 1500 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ரூபாய்  6,650 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1520 குறைந்து  ரூபாய் 53,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,120 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்