12 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva

வெள்ளி, 7 ஜூன் 2024 (07:31 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதையும் தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி  ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து குளிர்ந்த தட்பவெப்பநிலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்