சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

Siva
புதன், 6 மார்ச் 2024 (10:29 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தங்கம் விலை சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6040 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 48,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6510 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்