நேற்றைய சரிவில் இருந்து மீளாமல் மீண்டும் சரியும் பங்குச்சந்தை: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:16 IST)
பங்குச்சந்தை நேற்று சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் நஷ்டமடைந்தனர் என்று செய்திகள் வெளியான நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது. இது, முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பங்குச்சந்தை  கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று திடீரென பயங்கரமாக சரிந்தது. அந்த நிலைமையில் இன்றும் சரிவை எதிர்கொண்டுள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தையின் 183 புள்ளிகள் குறைந்து 84,117 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 64 புள்ளிகள் குறைந்து 25,750 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்