ஏறிய வேகத்தில் இறங்கிய பங்குச்சந்தை.. இன்று சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு..!

Siva

செவ்வாய், 27 மே 2025 (10:20 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தனர். 
 
ஆனால், ஏறிய வேகத்தில் இன்று பங்குச் சந்தை மீண்டும் இறங்கியுள்ளது என்பதும், மும்பை பங்குச் சந்தை 830 புள்ளிகள் சரிந்து 81,000 என்ற புள்ளிகளில் வர்த்தக மாறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல், தேசிய பங்கு சந்தை நிப்டி 238 புள்ளிகள் சரிந்து, 24,764 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்கு சந்தையில் டாக்டர் ரெட்டி, இன்டஸ் இண்ட் வங்கி, எஸ்பிஐ லைஃப் போன்ற ஒரு சில பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது என்பதும், மற்ற அனைத்து பங்குகளும் சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்