இந்திய பொருளாதாரத்தின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வந்த நம்பிக்கை காரணமாக, இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக அளவில் பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முன்னேறியதை அடுத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது நம்பிக்கையுடன் மீண்டும் இந்தியாவிலுள்ள பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்ந்து, 82,359 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 188 புள்ளிகள் உயர்ந்து, 25,400 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், HCL டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.