நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

Siva

செவ்வாய், 20 மே 2025 (09:41 IST)
நேற்று பங்குச்சந்தை குறைந்த அளவில் சரிந்த நிலையில், இன்று பங்குச்சந்தை சிறிய அளவில் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு இதனால் பெரிய அளவில் லாபமோ நஷ்டமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், வெறும் 18 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 82,280 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி, வெறும் 10 புள்ளிகள் உயர்ந்து 24,957 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், டாக்டர் ரெட்டி, எச்.சி.எல் டெக்னாலஜி, இண்டஸ் இன்ட் வங்கி, ஐடிசி, சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று பங்குச்சந்தை சிறிய அளவில்  உயர்ந்து இருந்தாலும் மதியத்திற்கு பின் சந்தையில் சரிவோ அல்லது அதிக அளவில் உயர்வோ ஏற்படக்கூடும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்