வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
திங்கள், 16 டிசம்பர் 2024 (10:21 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதையும் குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளில் சரிந்திருப்பது பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 222 புள்ளிகள் சரிந்து 81911 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 62 புள்ளிகள் சரிந்து 24,007 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் மணப்புரம் பைனான்ஸ், இந்தியன் வங்கி, சன் டிவி நெட்வொர்க், எஸ் வங்கி, பிவிஆர் ஐநாக்ஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளன.

அதேபோல், வேதாந்தா, டைட்டன் கம்பெனி, கோல்கேட், ஹீரோ மோட்டார், டாட்டா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டேக் மகேந்திரா, டாட்டா கெமிக்கல், சன் ஃபார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்