7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

Siva

திங்கள், 16 டிசம்பர் 2024 (08:17 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் ஏழு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, வெறும் 22 ரன்களே எடுத்து தத்தளித்து வருகிறது.

டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் போட்டி, முதல் நாளிலேயே மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்றைய நாளில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. சுமித் மற்றும் ஹெட் ஆகியோரின் அபார சதங்கள் காரணமாக நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்க எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று  ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த இன்னிங்சில் பும்ரா சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சிராஜ் 2 விக்கெட்டுக்களையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியவுடன் தொடக்க வீரர்கள் துரிதமாக ஆட்டமிழந்தனர். ஜெய்சுவால் 4 ரன்களுக்கும், சுப்மன் கில் 1 ரன்னுக்கும்  விராட் கோஹ்லி 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஏழு ஓவர்களின் முடிவில், இந்திய அணி வெறும் 22 ரன்களே எடுத்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், அணி தத்தளித்து வருகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்