பங்குச்சந்தை இன்றும் சரிவு.. ஆனால் நேற்று நடந்த மேஜிக் இன்றும் நடக்குமா?

Siva

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (09:45 IST)
இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியிருந்தாலும், நேற்று நடந்ததை போன்றதொரு மேஜிக் இன்றும் நடக்குமா என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
 
நேற்று காலை முதல் சரிவுடன் காணப்பட்ட சந்தை, திடீரென உயர்ந்து, வர்த்தகம் முடியும் போது நேர்மறையாக முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்றதொரு நிலை இன்றும் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 340 புள்ளிகள் சரிந்து 80,278 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 95 புள்ளிகள் சரிந்து 24,500 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டி, ஐடிசி, ஓஎன்ஜிசி, டெக் மகேந்திரா, டைட்டன் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்து காணப்படுகின்றன. நிஃப்டியில் உள்ள மற்ற அனைத்து பங்குகளும் சரிவுடன் தான் வர்த்தகமாகி வருகின்றன. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்