அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலால், நேற்று சரிந்த இந்திய பங்குச்சந்தை, இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளால் இன்று மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
பங்குச்சந்தையின் இன்றைய நிலை
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 69 புள்ளிகள் அதிகரித்து, 80,745 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து, 24,641 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை மேலும் உயரும் வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில், டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஜியோ பைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாக்டர் ரெட்டி, அப்போலோ ஹாஸ்பிடல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளன.