கடந்த வாரம் போலவே இந்த வாரமும் சரிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (09:55 IST)
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த நிலையில், இந்த வாரம் பங்குச்சந்தை உயரும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 650 புள்ளிகள் குறைந்து 76 ஆயிரத்து 713 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 205 புள்ளிகள் குறைந்து 23 ஆயிரத்து 226 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், இண்டஸ் இண்ட் வங்கி, பிரிட்டானியா, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டிசிஎஸ்,  ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. இன்போசிஸ், மாருதி, டைட்டான், ஹீரோ மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, ஐடிசி, ரிலையன்ஸ், பாரதியார், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு சரிவுடன் இருக்கும் என்பதால், புதிதாக பங்குச்சந்தையில் நுழைபவர் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்