மீண்டும் ஏற்றத்தில் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:34 IST)
அதானி விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரத்து 730 என்ற பள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 75 புள்ளிகள் அதிகரித்து 17845 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இனிவரும் நாட்களிலும் படிப்படியாக பங்குச்சந்தை உயரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்