பங்குச்சந்தை வரலாற்றில் நேற்று முதல் முறையாக சென்செக்ஸ் 64,000 புள்ளிகளை தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 64 ஆயிரத்து 500 புள்ளிகளை நெருங்கி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 52,000 என்று வந்த நிலையில் தற்போது 12000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 470 புள்ளிகள் உயர்ந்து 64 ஆயிரத்து 340 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 19085 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது