பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமில்லை... குறைவதற்கு வாய்ப்பும் இல்லை?

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (08:35 IST)
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது.  

 
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தொடும் நிலைக்கு வந்துவிட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின் படி, இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.31 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கொடைக்கானல் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ரூபாய் 100ஐ தொட்டுவிட்ட நிலையில் சென்னையிலும் விரைவில் 100ஐ தொட்டு விடும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்துக் கொண்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்