ஆந்திராவில் நிலத்தகராறில் பெற்ற தாய், தந்தையை மகனே டிராக்டர் ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர் அப்பலநாயுடு. இவருக்கு ஜெயம்மா என்ற மனைவியும், ராஜசேகர் என்ற மகனும் உள்ளனர். அப்பலநாயுடுவுக்கு சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. சமீபத்தில் ராஜசேகர் அந்த நிலத்தை விற்று பணம் தர சொல்லி அப்பலநாயுடு - ஜெயம்மாளிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் இடத்தை விற்க அவரே சில முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், சமீபத்தில் நிலத்தை சமப்படுத்துவதற்காக ட்ராக்டரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் நிலத்தை எதுவும் செய்யக்கூடாது என தடுத்து அப்பலநாயுடுவும், ஜெயம்மாவும் ட்ராக்டரை வழி மறித்தனர். இதனால் கோபமான ராஜசேகர் ட்ராக்டரை ஏற்றி பெற்றெடுத்த தாய்-தந்தையை கொடூரமாக கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K