2வது நாளாக மீண்டும் பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
வியாழன், 17 அக்டோபர் 2024 (10:23 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 273 புள்ளிகள் சரிந்து 81,242 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை 146 புள்ளிகள் சரிந்து 24,424 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ, ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார், ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் பெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ALSO READ: மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்வு..!


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்