இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்து கொண்டிருந்த நிலையில், நேற்று திடீரென லேசாக பங்குச்சந்தை சரிந்தது என்பதும் சுமார் 150 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்ந்து 81635 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 652 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹச்.சி.எல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதே நேரத்தில், சன் பார்மா, ஐடிசி, ஹிந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.