கடந்த இரண்டு வாரங்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது. தற்போது, பங்குச்சந்தை ஆரம்பம் முதலில் சரிவில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், குறைந்த அளவே சரிவு உள்ளதால், மதியத்திற்கு மேல் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், 197 புள்ளிகள் குறைந்து, 89518 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 51 புள்ளிகள் குறைந்து, 24628 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.
ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.