இந்தியா பங்குச் சந்தை நேற்று சரிவில் தொடங்கினாலும், ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் உயர்ந்தது. வர்த்தக முடிவில் சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்ததால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதாக வெளியாகிய தகவல், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதல் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையை நோக்கினால், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 80,455 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 24,036 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva