இந்திய பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகவே மோசமாக சரிந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்ல நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திங்கள் முதல் மூன்று நாளாக தொடர்ந்து உயர்வு கண்டது. இதே போல், இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்ந்து 75,897 என்ற அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 23,035 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், விப்ரோ, டிசிஎஸ், டைட்டான், இன்போசிஸ், டெக் மகேந்திரா, பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், கோல் இந்தியா, அப்பல்லோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல், அதானி போர்ட், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.