உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து அரைகுறையாக உதிர்த்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு லேசாக வெங்காயத்தை வேக விடவும்
மஞ்சள் தூளும் உப்பும் சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் சற்று வற்றியதும் உருளைக்கிழங்கு, மல்லிச்செடி சேர்த்து கிளறி சற்று புரட்டினால் போல் இறக்கி பொறிக்கடலை மாவை தூவி கிளறி வைக்கவும்.
இட்டலி தோசைக்கு தயார் செய்த சட்டினியை சற்று கெட்டியாக வைக்கவும். தோசை கல்லில் தோசை மாவை ஊற்றி நைசாக விரித்து திருப்பி போடு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கையும் சட்டினியையும் விரித்து மறுபாதி தோசையினால் மூடி பரிமாறவும்.