அடிக்கிற வெயிலில் தாமரை கருகிவிடும் – இறுதிப் பிரச்சாரத்தில் கனிமொழி !

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (09:38 IST)
நேற்று தூத்துக்குடியில் தனது இறுதிப் பிரச்சாரத்தை முடித்த கனிமொழி அடிக்கிற வெயிலில் தாமரை கருகிவிடும் எனக் கூறியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வின் மகளிரணி செயலாளர் கனிமொழி மற்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் இடையெக் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி இந்த முறை ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியது.

பிரச்சாரம் நடைபெற்ற பொழுதெல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கடைசி நாள் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் கனிமொழி நிறைவு செய்தார். அப்போது பேசிய அவர் ‘மோடியின் ஆட்சியில் நாட்டில் பாதுகாப்பு இல்லை. மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட போது பிரதமர் இங்கு வரவில்லை. அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. நான் வெற்றி பெற்றால் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன். சமூக வலைதளங்களில் கோபேக் மோடி என்பது வைரலாகி வருகிறது. மோடியை மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு மக்கள் வீட்டுக்குப் போக சொல்லுகிறார்கள்.  அவருடன் நாம் எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தாமரை மலரும் என சொல்கிறார்கள். அடிக்கிற வெயிலில் தாமரை மலராது. பதிலாகக் கருகிவிடும். உச்சியில் நெருப்பாய் தகிக்கும் சூரியனைப் போல மக்களும் கோபமாக உள்ளனர். இந்த தேர்தலில் நாடும் நமதே, நாற்பதும் நமதே, தமிழ்நாடும் நமதே என மாற்றிக் காட்ட வேண்டும்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்