2014-ல் டீ மாஸ்டர்; 2019-ல் சவுகிதார்: மோடியின் அபார வளர்ச்சிய பாருங்க...

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (17:51 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் திடீரென பிரதமர் மோடி தனது பெயரை டிவிட்டரில் சவுகிதார் (காவலாளி) நரேந்தர மோடி என மாற்றியுள்ளார். 
 
இதைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்கு முன்னால் சவ்கிதார் என்பதை சேர்த்து உள்லனர். பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடந்த 2014 ஆம் ஆண்டு டீ விற்பனையாளராக இருந்த மோடி, இப்போது 2019-ல் காவலாளியாக மாறியுள்ளார். பாஜக ஆட்சியில் இந்தியா மாறிவருகிறது என்று கூறப்படுவது இதைத்தானா? என்று கிண்டலாக கேட்டுள்ளார். 
இதற்கு முன்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற பலர் இந்த சவுகிதாரை விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் மாயாவதி, பாஜகவை வீழ்த்துவதற்காக, சமாஜ்வாடி மற்றும் ஆர்.எல்.டியுடன் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். நான் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதைவிட நாம் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவதே முக்கியம். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையை மனதில்கொண்டு இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்