மட்டன் பிரியாணி 200ரூ… சிக்கன் பிரியாணி 180 ரூ – தேர்தல் ஆணையம் நிபந்தனை !

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (14:30 IST)
தேர்தல் பிரச்சாரங்களைக் கட்சிகள் தொடங்கவுள்ள நிலையில் பிரச்சாரங்களுக்கு எவ்வளவு செய்யவேண்டும் எனற நிபந்தனையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேக்கட்டமாக 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதையடுத்து வேட்பாளர்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரையும், சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தலா ரூ.28 லட்சம் வரையும் செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பொருட்களுக்கான விலைப்பட்டியல் :-
மட்டன் பிரியாணி - ரூ.200
சிக்கன் பிரியாணி - ரூ.180
டிபன் செலவு - ரூ.100
தண்ணீர் பாட்டில் - ரூ.20
டீ - ரூ.10
பால் - ரூ.15
வெஜிடபிள் ரைஸ் - ரூ.50
இளநீர் - ரூ.40
பூசணிக்காய் - ரூ.120
புடவை மற்றும் டி-ஷர்ட்- ரூ.200 மற்றும் ரூ.175
பொன்னாடை - ரூ.150
பிரச்சார வாகன ஓட்டுநர்கள் ஊதியம் - ரூ.695
மண்டபம் வாடகை செலவு - ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை
வால் சைஸ் எல்இடி வாடகை கட்டணம்(8 மணி நேரத்திற்கு) - ரூ.12,000
5 நட்சத்திர ஓட்டலில் ஏசி அறை செலவு - ரூ.9,300
3 நட்சத்திர ஓட்டலில் ஏசி அறை செலவு - ரூ.5,800
பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் மேளத்துக்கான வாடகை செலவு - ரூ.4,500

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்