இந்த மாநிலத்தில் சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களின் அனைவரின் பெயரும் வேறு வாக்குச்சாவடிகளுக்கு மாற்றப்பட்டு விட்டன. ஆனால் ஜனில் தயாங், சொகேலா தயாங் என்ற தம்பதிகளின் பெயர்கள் மட்டும் வேறு வாக்குச்சாவடிகளுக்கு மாற்றப்படவில்லை. 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, இவர்கள் இருவருக்கு மட்டும் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
இப்போது ஜனிலின் பெயர் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் சொகேலா தயாங் பெயர் மட்டும் இன்னமும் அதே வாக்குச்சாவடியில் தான் உள்ளது. இந்த ஒருவருக்காக மட்டும் இப்போது அங்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. முறையான சாலை வசதிகள் இல்லாத அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் பொருட்களைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.