அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தயார்!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (21:22 IST)
அஜித் நடிக்கவுள்ள ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக அஜீத் தன்னை தயார்படுத்தி வருவதால் ஒரு சில மாதங்கள் காலதாமதமாகி விட்டதாகவும், அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் கேரக்டருக்கு அஜித் தயாராகி விடுவார் என்பதால் அடுத்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இன்று போனிகபூர் அறிவித்திருந்தார். இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது 
 
இந்த நிலையில் அஜீத் நடிக்கும் 61வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. ‘தல 61’படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஒரு முன்னணி இயக்குனர் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஏஎம் ரத்னம் தயாரிப்பில் அஜித் ’என்னை அறிந்தால்’ என்ற படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அஜீத் மீண்டும் ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை அனேகமாக விஷ்ணுவர்தன் அல்லது வெங்கட்பிரபு இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்