சூர்யாவிடம் சிக்கி சின்னாபின்னாமான விக்னேஷ்சிவன்

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (23:55 IST)
சூர்யாவை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் படம் முடிவடைதற்குள் நொந்து நூலாகிவிடுவார்கள் என்பது பலருக்கு தெரிந்த கதை. இந்த விஷயம் தெரியாமல் சிக்கி கொண்ட விக்னேஷ் சிவன் தற்போது வெளியே வர முடியாமல் விழித்து கொண்டிருக்கின்றாராம்.



 
 
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட விக்னேஷ் சிவன், அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியை தொடங்கவிருந்த நிலையில் சூர்யாவிடம் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்ததாம்.
 
படத்தை எடுத்தவரை போட்டு பார்த்ததில் தனக்கு திருப்தி இல்லை என்றும் மீண்டும் சில காட்சிகளை நீக்கிவிட்டு ரீஷூட் பண்ணலாம் என்று சூர்யா கூறினாராம். அவர் சொன்ன காட்சிகள் எல்லாம் முடிக்க வேண்டும் என்றால் ஒரு மாதம் ஆகிவிடுமாம். இப்படியே சென்றால் சிவகார்த்திகேயன் படம் கைவிட்டு போய்விடுமா? என்ற அச்சத்தில் இருக்கின்றாராம் விக்னேஷ் சிவன்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்