விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ், சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவுக்கு 36வது படம்.இந்தப் படம், தன்னுடைய கனவுப்படம் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த கதை இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து பிரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஷூட்டிங் தொடங்கலாம் எனத் தெரிகிறது.